வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 30-ந் தேதி அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்ற போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை,
இந்த நிலையில், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். செயலாளர் லாலாஜி, பொருளாளர் முனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணைச் செயலாளர் கேசவன், வட்ட துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Related Tags :
Next Story