எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத ஆளுங்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேட்டி
எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத ஆளுங்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் 45 அடி ரோட்டில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., கோகுலகிருஷ்ணன் எம்.பி., மாநில துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, தொகுதி செயலாளர் ஜானிபாய், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ, பொருளாளர் சங்கர் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், சுகுமாறன், வேட்பாளர் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது நமது வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய ‘ஜக்கு’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் அலுவலகத்தை திறந்துள்ளோம். ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். இந்த இடைத்தேர்தல் புதுச்சேரிக்கு முக்கியமான தேர்தல். புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியைப்பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. புதிய திட்டங்கள் ஏதும் கொண்டுவரவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை கவர்னருடன் யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் நடந்து கொண்டுள்ளது. 5 ஆண்டுகளும் இப்படியே ஓட்டிவிடலாமா? என்றுதான் பார்க்கின்றனர்.
இதே நிலைதான் எங்களது ஆட்சிக்காலத்திலும் இருந்தது. இருப்பினும் எதனை எதிர்கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் குறைகள் பற்றி மக்களுக்குத் தெரியும். புதுவையில் தற்போது அதிகார போட்டி தான் நடக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தல் மூலம் காங்கிரஸ் ஆட்சியின் அவல நிலைக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை. புதுச்சேரியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கூட கவனம் செலுத்தப்படவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தான் இலவச மிக்சி கிரைண்டர், மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. எனவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் புவனேஸ்வரன் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story