சென்னை பம்மல் அருகே விமான பணிப்பெண்களிடம் வழிப்பறி; 4 வாலிபர்கள் சிக்கினர்
சென்னையை அடுத்த பம்மல் அருகே விமான பணிப்பெண்களை வழிமறித்து, இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
பம்மல் அருகே உள்ள திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானப்பணிபெண்களாக பணிபுரியும், 2 பெண்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். விமான நிலையத்தில் வேலை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் 2 பேரும், தங்களது இருசக்கர வாகனத்தில் அறைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திருநீர்மலை அருகே சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று 2 பெண்களையும் வழிமறித்தனர். அப்போது அந்த கும்பல் பெண்கள் வைத்திருந்த கைப்பையை பறிக்க முயன்றது. இதனால் அச்சமடைந்த அவர்கள் கூச்சலிடவே, பெண்களின் இருசக்கர வாகனத்தை பறித்துகொண்டு, மர்ம கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து 2 பெண்களும் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த பல்லாவரத்தை சேர்ந்த சைன் (வயது 23), பிரேம்குமார் (22), அவிநாஷ் (23), பெருங்களத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story