கடலூரில் போலீஸ் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவள்ளுவர் தாணி(ஆட்டோ) ஓட்டுனர் நல சங்க தொடக்க விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கடலூர் பஸ் நிலையம் அருகில் நேற்று காலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நாம் தமிழர் கட்சியினர் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு இதர தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தொடக்க விழா நடைபெறவில்லை.
இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். அதன் பேரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் மாவட்ட செயலாளர் சாமி ரவி, திருவள்ளுவர் தாணி ஓட்டுனர் நல சங்க தலைவர் கொம்பன் என்ற பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர் சுரேன், பொருளாளர் விமல், தொகுதி செயலாளர் செந்தில், புதுச்சேரி மாநில தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் உள்பட ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
ஆனால் திருவந்திபுரம் கோவில் பாதுகாப்புக்காக போலீசார் சென்றிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் சரியாக பேசாமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சமாதானமாகி கலைந்து சென்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரிடமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story