குறைப்பிரசவத்தில் 580 கிராம் எடையில் பிறந்த குழந்தை 147 நாட்களில் 2 கிலோ 200 கிராமாக அதிகரித்தது டாக்டர்கள் சாதனை
குறைப்பிரசவத்தில் 580 கிராம் எடையில் பிறந்த குழந்தை 147 நாட்களில் 2 கிலோ 200 கிராமாக அதிகரித்தது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து நாகை அரசு மருத்துவமனை டாக்டர் கள் சாதனை படைத்து உள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி லதா. இவர் இரண்டு முறை கர்ப்பம் ஆகியும் கருச்சிதைவு ஏற்பட்டதால் மிகவும் வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் 3-வது முறையாக லதா கர்ப்பம் அடைந்தார். இந்த குழந்தையாவது நன்றாக பிறக்க வேண்டும் என தெய்வத்தை வேண்டிக்கொண்டார். இந்த நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த மே மாதம் 10-ந் தேதி குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 580 கிராம் எடையே இருந்தது. குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததால் டாக்டர்கள் குழுவினர், அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். குறைந்த எடையுள்ள குழந்தைக்கு மூச்சு விடுதல், விழுங்குதல் போன்ற எந்த செயலும் தெரியாது.
எடை அதிகரிப்பு
இதனால் அந்த குழந்தைக்கு செயற்கை முறையில் சுவாசம் அளித்தது டாக்டர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. 147 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தையின் எடை அதிகரித்தது. தற்போது 2 கிலோ 200 கிராம் எடையுடன் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையும், தாயும் வீடு திரும்பினர். இந்தியாவில் உடல் எடை குறைவாக பிறந்த குறைப்பிரசவத்தில் காப்பாற்றப்பட்ட 3-வது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி
இது குறித்து லதா கூறும்போது, ஏற்கனவே இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தபோது இந்த குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினேன். ஆனாலும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Related Tags :
Next Story