பயங்கரவாத முகாம்களை அழிக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அனுப்புங்கள் ஆதித்ய தாக்கரே காட்டம்

பயங்கரவாத முகாம்களை அழிக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அனுப்புங்கள் ஆதித்ய தாக்கரே காட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அனுப்புங்கள், அவர்கள் பயங்கரவாத முகாம்களை அழிக்கட்டும் என ஆதித்ய தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.

மும்பை, 

மெட்ரோ ரெயில் அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அனுப்புங்கள், அவர்கள் பயங்கரவாத முகாம்களை அழிக்கட்டும் என ஆதித்ய தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.

கடும் எதிர்ப்பு

ஆரேகாலனியில் மரங்களை வெட்டுவதற்கு ஆளும் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தற்போது அங்கு மரங்கள் வெட்டும் பணி தொடங்கிய நிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வெட்கக்கேடானது

மும்பை மெட்ரோ ரெயில் கழகம் எதற்காக மும்பைவாசிகளை குற்றவாளிகள் போல் நடத்துகிறது என தெரியவில்லை. மக்களின் கோரிக்கையை அந்த கழகம் செவிகொடுத்து கேட்க மறுக்கிறது. அது புத்தியில்லாமல் மும்பையின் நுரையீரலை அழித்துக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு காலநிலை மாற்றம் குறித்தும், பிளாஸ்டிக் சுற்றுசூழல் மாசு குறித்தும் பேசிக்கொண்டிருக்க தேவையில்லை.

மும்பை மெட்ரோ ரெயில் கழகம் ஆரே காலனியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பை வெட்டி வீழ்த்த நயவஞ்சகமாகவும் விரைவாகவும் காட்டும் வீரியம் வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது.

காஷ்மீருக்கு அனுப்புங்கள்

இந்த அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணி அமர்த்துங்கள். இங்கு மரத்தை அழிப்பதை விட அங்கு பயங்கரவாத முகாம்களை அவர்கள் அழிக்கட்டும்.

இந்த மெட்ரோ ரெயில் திட்டம் பெருமையுடன் தொடங்கப்படவேண்டியதாகும். ஆனால் இரவோடு, இரவாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது வெட்கத்திற்கும், வேதனைக்கும் உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story