குடும்பத்தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை
குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள கருப்பம்பாளையம் உதயம் நகரைச் சேர்ந்தவர் சகாய ராஜா (வயது39). இவர் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜெனிபர் (33) என்ற மனைவியும் ஜெசிபுளோரா(11 )என்றமகளும், ஜஸ்டின் (7)என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சகாயராஜாவிற்கும், ஜெனிபருக்கும இடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் கோபம் அடைந்த ஜெனிபர் குளியல் அறைக்குசென்றார். பின்னர் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்தார். தீ மள,மளவென பரவியதால் வலி தாங்காமல் ஜெனிபர்அலறினார்.
இதனை அறிந்த சகாயராஜா ஓடிச்சென்று, மனைவிஜெனிபரை காப்பாற்ற முயன்றார். அவரது உடலில் பரவிய தீயை அணைத்து வெளியே கொண்டு வந்தார். ஆனால் ஜெனிபர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வேனை வரழைத்து ஜெனிபரை மீட்டு, கோவை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்குடாக்டர்கள் ஜெனிபருக்கு தீவிரசிகிச்சையளித்தும்சிகிச்சை பலனின்றி நேற்றுமாலைஜெனிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஜெனிபரின் கணவர் சகாயராஜா கொடுத்தபுகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீஸ்இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story