குமரி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்


குமரி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தாசில்தார்கள் மற்றும் பணியிடங்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் நத்தம் அலகு(3) தனி தாசில்தார் அப்துல்லா மன்னான், அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார் நாகர்கோவில் நத்தம் அலகு (3) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி, காலியாக உள்ள தோவாளை தாசில்தார் பணியிடத்துக்கும், நத்தம் அலகு (1) தனி தாசில்தார் விஜயலட்சுமி, அகஸ்தீஸ்வரம் சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக உசூர் மேலாளர் (ஆயம்) சாரதாமணி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், செண்பகராமன்புதூர் டாஸ்மாக் கிடங்கு உதவி மேலாளர் சேகர், நாகர்கோவிலில் உள்ள கோட்ட ஆய மேற்பார்வையாளராகவும், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் சுசீலா, நாகர்கோவில் உசூர் மேலாளராகவும் (ஆயம்), நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கேபிள் டி.வி. தனி தாசில்தார் ரமேஷ், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு

பதவி உயர்வு பெற்றுள்ள துணை தாசில்தார்கள் மற்றும் அவர்களுடைய பணியிடங்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலக துணை தாசில்தார் மற்றும் கண்காணிப்பாளர் பதவி உயர்வு மூலம் செண்பகராமன்புதூர் டாஸ்மாக் உதவி மேலாளராகவும், விளவங்கோடு தேர்தல் துணை தாசில்தார் ரஜேஷ், நாகர்கோவில் அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ரமணி, நாகர்கோவில் நத்தம் (1) தனி தாசில்தாராகவும், துணை தாசில்தார் வினோத், நாகர்கோவில் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Next Story