நாகர்கோவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவம்: சென்னையை சேர்ந்த 3 பெண்கள் கைது
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் நகை பறித்து தப்ப முயன்ற சென்னையை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஊர், ஊராக சென்று கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலை அடுத்த பரசேரியை சேர்ந்தவர் ராஜம் (வயது 50). இவர் நேற்று முன்தினம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ராஜாவூர் செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் சேர்ந்து ராஜம் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு ஓடினர். இதைத் தொடர்ந்து 3 பெண்களையும் பொதுமக்கள் பிடித்து கோட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
முதலில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட 3 பேரும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த தேன்மொழி (35), கார்த்திகா (30) மற்றும் ஆர்த்தி (37) என்பது தெரிய வந்தது. இதில் தேன்மொழியும், கார்த்திகாவும் ஒரே நபரை திருமணம் செய்துள்ளனர்.
3 பெண்கள் கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது தேன்மொழி உள்ளிட்ட 3 பெண்களும் ஊர், ஊராக சென்று பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பது மற்றும் பிக்பாக்கெட் அடிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமானது. இதே போல நாகர்கோவில் வந்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட போது பொதுமக்களிடம் சிக்கி கொண்ட னர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இவர்கள் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற விவரம் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருக்கலாம் என்றும், எனவே 3 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story