தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 7:25 PM GMT)

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு விளையாட்டு ஊக்கத்தொகை வழங்கும் விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு விளையாட்டு ஊக்கத்தொகை வழங்கும் விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான விளையாட்டு ஊக்கத் தொகைகளை தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற லெப்பைகுடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவர் ஹாஜி முகம்மது, தடகள போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி நாகப்பிரியா ஆகியோருக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும், ஜுடோ போட்டியில் வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவி பிரியாவுக்கு ரூ.13 ஆயிரத்திற்கான காசோலையையும் கலெக்டர் சாந்தா வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு உடனிருந்தார்.

Next Story