கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தி பெண் தீக்குளித்து தற்கொலை 3 பேருக்கு வலைவீச்சு
ஊத்துக்கோட்டை அருகே கணவர் குடிபழக்கத்துக்கு ஆளானதால் விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர், மாமியார், மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள பென்னாலுார்பேட்டை அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசு (வயது 38). கொத்தனார். இவரது மனைவி வசந்தி (28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இதனால் வசந்தி மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாசு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளானார்.
அதன் பின்னர் வாசு வெளியே சென்று விட்டார். கணவன் குடிபழக்கத்துக்கு ஆளானது, குழந்தையின்மை, மாமனார், மாமியாரின் துன்புறுத்தல் போன்றவை வசந்திக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் விரக்தி அடைந்த வசந்தி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார். வசந்தியின் தற்கொலை குறித்து அவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வாசு, அவரது தந்தை ஆறுமுகம், தாய் முனியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

இதனால் வாசு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இது குறித்து கணவர்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனிடையே வாசுவின் தந்தை ஆறுமுகம் (58) மற்றும் தாய் முனியம்மாள் (52) ஆகியோர் வசந்தியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வாசு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னர் வாசு வெளியே சென்று விட்டார். கணவன் குடிபழக்கத்துக்கு ஆளானது, குழந்தையின்மை, மாமனார், மாமியாரின் துன்புறுத்தல் போன்றவை வசந்திக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் விரக்தி அடைந்த வசந்தி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார். வசந்தியின் தற்கொலை குறித்து அவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வாசு, அவரது தந்தை ஆறுமுகம், தாய் முனியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story