மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு


மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-புனே விரைவு சாலையில் சென்ற டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மும்பை,

மும்பை-புனே விரைவு சாலையில் சென்ற டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

ஆயில் கொட்டியது

நவிமும்பை போர் மலைப்பகுதியில் உள்ள அம்ருதாஜன் பாலம் அருகே மும்பை-புனே விரைவு சாலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென லாரியில் இருந்த ஆயில் ரோட்டில் கொட்டியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தி ஆயில் கசிவை சரி செய்தார். இதற்கிடையே ரோட்டில் அதிகளவில் ஆயில் கொட்டியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

2 மணி நேரம்

தகவல் அறிந்த நெடுஞ்சாலைரோந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மாநில சாலை மேம்பாட்டுக் கழக ஊழியர்கள் ரோட்டில் கொட்டிய ஆயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று அதிகாலை மும்பை-புனே விரைவு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நிலைமை சீராக நீண்டநேரம் பிடித்தது.

Next Story