தொழிலாளர்களின் கடும் உழைப்பினால் மந்தநிலை மாறும் - ஆயுதபூஜை வாழ்த்து செய்தியில் நாராயணசாமி நம்பிக்கை
தொழிலாளர்களின் கடும் உழைப்பினால் தொழில்துறையின் மந்தநிலை மாறும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆயுதபூஜை வாழ்த்து செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
ஆயுதபூஜையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் நம் ஆன்றோரின் வாக்குப்படி நமக்கு வாழ்வளிக்கும் தொழிலை தெய்வமாக வணங்கும் ஆயுதபூஜை திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது பணியிடத்தை தெய்வமாக நினைத்து வழிபடுவது மட்டும் இந்த பண்டிகையின் நோக்கம் அல்ல. அனைவரும் தாம் செய்யும் தொழிலை சத்தியம் தவறாது, நேர்மையான, நியாயமான வழியில் செய்வதுதான் ஆயுதபூஜையின் அடிப்படை தத்துவம்.
அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழில் செய்யவேண்டும் என்பதும் இவ்விழாவின் உயரிய நோக்கங்கள் ஆகும். தொழில் வளர்ச்சியே ஒருநாட்டின் வளர்ச்சியை குறிக்கும். எனவே நாடு வளர்ச்சியடையவும், நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகிடவும், தொழில்துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாரதியார் பாடியதும் இந்த நோக்கில்தான்.
நான் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு, புதுச்சேரி மாநிலத்துக்கென ஒரு புதிய தொழில் கொள்கையினை உருவாக்கி புதிய தொழிற்சாலைகள் தொடங்கிட அடித்தளமிட்டேன். அதன் தொடர்ச்சியாக புதுவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்ட தொழில்துறை மாநாடு நடத்தப்பட்டு புதுச்சேரியில் பல பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க இசைவு பெறப்பட்டது.
தற்போது இந்திய அளவில் தொழில்துறை மந்த நிலையினை எட்டியிருந்தாலும், உழைக்க தயங்காத தொழிலாளர்கள் நிறைந்த நம் நாடு, அவர்களின் கடும் உழைப்பினால் இதில் இருந்து மீண்டு வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை. தீய சக்தியை அழித்து தர்மம் வெற்றிபெற்றதே விஜயதசமி என்பது நாம் அறிந்ததே. புதுவை மாநிலத்தில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆயுதபூஜை திருநாள் வாழ்த்துக்களையும், மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து முன்னேற இந்த சரஸ்வதி பூஜை தினத்தில் வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அசுரர்களின் தொல்லை நீங்கி, தேவர்கள் மற்றும் முனிவர்கள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அன்னை பராசக்தியை வணங்கிடும் விதமாக நம் பாரத மக்கள் மட்டுமின்றி உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி, தசரா, காளிபூஜை, துர்காபூஜை போன்ற பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் பண்டிகையாக இது திகழ்கிறது.
கல்வி, தனம் மற்றும் வீரத்துக்கு அதிபதிகளாக விளங்கும் முப்பெரும் தேவியர்களும் நம் பாரதத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வித்தரம் மென்மேலும் உயரவும், புதிய தொழிற்சாலைகள் பல உருவாகி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவும், அனைத்து மக்களும் நல்ல ஆரோக்கியம் மற்றும் சக்தி பெற்று நல்வாழ்வு வாழவும் அருள்புரிய வேண்டும்.
நம் பாரத மக்களின் தீராத பக்தி, தெய்வ வழிபாடு மற்றும் விடாமுயற்சியாலும்தான் பார் போற்றும் ஒப்பற்ற பிரதமரை நமக்கு தந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி, ரூ.5 லட்சத்துக்கான இலவச காப்பீடு போன்ற திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி ஏழை மக்களும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் என்று எனது ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Related Tags :
Next Story