வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 4:28 PM GMT)

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள ரே‌‌ஷன் கடையில் இருந்து அரிசி கடத்தப்பட்டு பதுக்குவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றதடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சையது தலைமையிலான போலீசார் அரவக்குறிச்சி ராஜாபேட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள சாகுல்ஹமீது (வயது 35) என்பவரது வீட்டில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 மூட்டைகளில் இருந்த 2,400 கிலோ ரே‌‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சாகுல்ஹமீது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மண்மாரி பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ராஜாபேட்டையில் உள்ள ரே‌‌ஷன் கடையின் ஊழியர்களிடமும் துறை ரீதியான விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மே‌‌லும் ரே‌‌ஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story