மாவட்ட செய்திகள்

வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிரமுகர் ‘போக்சோ’வில் கைது + "||" + In Vyasarpadi harassment for little girl; DMK person arrested in pocso act

வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிரமுகர் ‘போக்சோ’வில் கைது

வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிரமுகர் ‘போக்சோ’வில் கைது
வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பெரம்பூர்,

வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 70). இவர் அதே பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். மேலும் தி.மு.க. கட்சியில் 45-வது வார்டு அவைத்தலைவராகவும் உள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 11 வயதுள்ள சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வந்துள்ளார்.


அப்போது, அந்த சிறுமியை கடைக்குள் அழைத்து சென்ற செந்தூர்பாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமி கடையிலிருந்து அழுது கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் நடந்தவற்றை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாயார் கடைக்கு சென்று செந்தூர்பாண்டியிடம் இதை தட்டிக்கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சிறுமியின் தாயாரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்செல்வி விசாரணை நடத்தி, செந்தூர்பாண்டியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வியாசர்பாடி கணேசபுரத்தில் அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி பூங்கா ‘அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்’ என மக்கள் புகார்
சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் மாநகராட்சி பூங்கா அலங்கோலமாகி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.