மாவட்ட செய்திகள்

ஆசைவார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு; காதலன் கைது + "||" + Saying words of desire Exciting for a college student Refusal to marry; Lover arrested

ஆசைவார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு; காதலன் கைது

ஆசைவார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு; காதலன் கைது
ஆசைவார்த்தைகள் கூறி, கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அசாருதீன்(வயது 28). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அடிக்கடி கல்லூரி மாணவியிடம், முகமது அசாருதீன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவி தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி முகமது அசாருதீனிடம் கேட்டு உள்ளார். அப்போது திருமணத்திற்கு முகமது அசாருதீன் மறுத்து உள்ளார்.

மேலும் திருமணம் செய்ய கூறி வற்புறுத்தினால் நாம் 2 பேரும் உல்லாசமாக இருந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் கல்லூரி மாணவியை, முகமது அசாருதீன் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் பற்றி கூறி உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் முகமது அசாருதீன் மீது பண்ட்வால் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.