டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்


டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2019 10:30 PM GMT (Updated: 8 Oct 2019 7:10 PM GMT)

டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் உளள சீனிவாசபுரம் கோட்டம் 9-ல் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜனாகிரவீந்திரன் கலந்து கொண்டு 30 பேருக்கு சீருடைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சியினை பிளாஸ்டிக் இல்லாத தஞ்சையாக மாற்றுவோம். மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும். மக்களும் அவற்றை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

தடுக்க வேண்டும்

தற்போது பருவமழை தொடங்க உள்ளதால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பரவுவதை தடுக்கலாம். மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பிளாஸ்டிக் இல்லாத தஞ்சை என்ற உறுதிமொழியை ஏற்றனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story