சிவகங்கையில் உடல்கருகி பிணமாக கிடந்த என்ஜினீயர் - எரித்துக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை


சிவகங்கையில் உடல்கருகி பிணமாக கிடந்த என்ஜினீயர் - எரித்துக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்குள் உடல் கருகிய நிலையில் என்ஜினீயர் பிணமாக கிடந்தார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை, 

சிவகங்கை சாத்தப்பர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 35). இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் ஆவார். அவருடைய மனைவி காளீஸ்வரி (30). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்தநிலையில் நவராத்திரியையொட்டி காளீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அரவிந்த் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே காளீஸ்வரி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. கணவர் அரவிந்தன் வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக கிடந்தார்.

அப்போது காளீஸ்வரி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.அரவிந்தன் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அரவிந்தன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story