திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலி தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலியானார். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன் (வயது 26). விவசாயி. கிடாமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் மணிமாறன் (28). இவர் நாகையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் மணிமாறன் தனது மோட்டார்சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இடையாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த மணிகண்டன் மோட்டார்சைக்கிளும், மணிமாறன் மோட்டார்சைக்கிளும் மோதி கொண்டன. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து நன்னிலம் நோக்கி வந்த தனியார் பஸ் மணிகண்டன் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் மணிமாறன் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் படுகாயமடைந்தார்.
பஸ் டிரைவருக்கு வலைவீச்சு
உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மணிமாறனை மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story