ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டு


ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டுபோனது.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் தர்மன்(வயது 60). தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர், நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ்சில் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்தார்.

நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கியபோது தான் அமர்ந்திருந்த இருக்கையின் மேல் பகுதியில் வைத்திருந்த தனது பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ் முழுவதும் தேடியும் பை கிடைக்கவில்லை.

அந்த பையில் அவர் ரூ.1 லட்சம் வைத்து இருந்தார். பஸ்சில் வரும்போது யாரோ மர்மநபர்கள் ரூ.1 லட்சம் இருந்த அவரது பையை நைசாக திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story