உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டி த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டி த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 6:55 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், நாகை மாவட்ட த.மா.கா. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார்.

இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் ராமலிங்கம், சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள், உள்ளாட்சி தேர்தலில் எந்தந்த பதவி களுக்கு போட்டியிடுவது ஆகியன குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

பாதாள சாக்கடை

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிக்க தமிழக அரசை கேட்டு கொள்வது. மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை உடைப்புகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார தலைவர்கள் கார்த்திகேயன், பண்டரிநாதன், கலியமூர்த்தி, சார்லஸ், சங்கர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.கார்த்தி நன்றி கூறினார்.

Next Story