பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 218 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி திருமண நிதி உதவி-தாலிக்கு தங்கம்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 218 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி திருமண நிதி உதவி-தாலிக்கு தங்கம் கலெக்டர் சாந்தா வழங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த 158 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த 60 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 218 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story