மாவட்ட செய்திகள்

இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் + "||" + Opposition to Hindi Demonstrate

இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,

கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டு வைக்கப் படுவதாகவும், இதனை கண்டித்தும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளப்பட்டியில் அருந்ததியர்களுக்கு தனி சுடுகாடு வசதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பான கோ‌‌ஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்ததாகவும், தனியார் ஓட்டலில் அறை வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஈடுபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
2. மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...