மாவட்ட செய்திகள்

விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு + "||" + Vijayadasamyam is a virgin Statue of Durgi Amman in the sea

விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு

விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
விஜயதசமியையொட்டி முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.
கன்னியாகுமரி,

திருவனந்தபுரம் பவுர்ணமி காவு என்ற இடத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு விஜயதசமியையொட்டி 2½ அடி உயர களிமண்ணால் ஆன துர்க்கை அம்மன் சிலை மற்றும் வெண்கலத்திலான ்சரஸ்வதி, லெட்சுமி சிலைகளும் பூஜைக்கு வைக்கப்பட்டது.


இதையடுத்து நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி சிலைகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தை புவன சந்திரன் தொடங்கி வைத்தார். ஆர்ய சாந்தவனா பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவன தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான சிவாஜி தலைமை தாங்கினார்.

முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சி.என்.ராஜதுரை, அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் வினோத், தலைமை பூசாரி தென்கரை மகாராஜ பிள்ளை, கோவில் நிர்வாகி சின்காதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, ஆர்.எஸ்.எஸ். பொ றுப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளக்கரையில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
குடவாசல் அருகே குளக்கரையில் ஐம்பொன்சிலை கண்டெடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
2. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3. உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு
உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
4. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
5. சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி ஏற்பாடு
சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.