கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கொல்லங்கோடு,
கோவில்பட்டி அருகே வடக்குபுதூர் கிராமத்தை சேர்ந்தவர்சாகுல்ஹமீது. இவருடைய மகன் செய்யது அலி (வயது 19). இவர் தொழில் தொடர்பாக குமரி மாவட்டம் வந்தார். அங்கு நடைக்காவு பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே நடைக்காவு பகுதியை சேர்ந்த பிராங்ளின் ஜோஸ் (36) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். நடைக்காவு-சூழால் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதில் பிராங்ளின் ஜோஸை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்யது அலி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story