மாவட்ட செய்திகள்

சேந்தமங்கலத்தில் பரபரப்பு இருதரப்பினர் மோதல்; 8 பேர் கைது போலீசார் குவிப்பு + "||" + Fierce Bilateral Conflict at Sandamangalam; 8 people arrested by police

சேந்தமங்கலத்தில் பரபரப்பு இருதரப்பினர் மோதல்; 8 பேர் கைது போலீசார் குவிப்பு

சேந்தமங்கலத்தில் பரபரப்பு இருதரப்பினர் மோதல்; 8 பேர் கைது போலீசார் குவிப்பு
சேந்தமங்கலத்தில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். அதில் 8 ே்பரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (35). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரே‌‌சுக்கும், கர்ணன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரே‌‌ஷ் நேற்று நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த தனது நண்பர்களுடன் கர்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.


அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் கர்ணன் தரப்பை சேர்ந்த கரிகாலன், ஜீவா, சூர்யா, தளபதி, மோகன்குமார், அண்ணாதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் குவிப்பு

அதே போல சுரே‌‌ஷ் தரப்பை சேர்ந்த காசி, கனகராஜ், முருகேசன், இவரது மனைவி பாக்கியம், ஆனந்த்பாபு, கமலம் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் தரப்பை சேர்ந்த குணசேகரன், கார்த்திக், ஆனந்த்பாபு, கனகராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அதே போல கர்ணன் தரப்பை சேர்ந்த கரிகாலன், விஜி, ஆர்.சூரியபிரகாஷ், ஏ.சூரியபிரகாஷ் ்ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3. புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது
புவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. வேதாரண்யத்தில் பஸ்கள் இயங்கின; கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியது
வேதாரண்யத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே மோதல்: 2-வது நாளாக கடைகள் அடைப்பு; 28 பேர் கைது
வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...