மாவட்ட செய்திகள்

கண்களை பாதுகாப்பது குறித்து மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார் + "||" + Gottsheer initiated a medical student-student awareness rally on protecting the eyes

கண்களை பாதுகாப்பது குறித்து மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

கண்களை பாதுகாப்பது குறித்து மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் கண்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் மயில் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,

உலக கண் பார்வை தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதே போல குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்ணியல் துைற சார்பில் கண்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.


இதில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பேரணியை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சென்று முடிவடைந்தது.

கருத்தரங்கம்

பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றார்கள். அதாவது மன அழுத்தம், கண் நீர் அழுத்தம், இவை மனிதனின் அழுத்தம். வந்தபின் பார்ப்போம் என்று இல்லாமல் வரும்முன் காப்போம். கண்ணீர் அழுத்த நோயை தவிர்ப்போம், ஒளி கொண்ட சுடர்களாக முன்னேறுவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

இதைத் ெதாடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் கல்லூரி டீன் பாலாஜிநாதன் பங்கேற்று பேசினார். அப்போது, “கண் மிகவும் முக்கியம். கண்களை இழந்து விட்டால் வாழ்க்கையே இழந்தது போல ஆகிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவ மாணவர்களும் சுகாதார தூதுவர்களாக இருந்து கண்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார். அதன்பிறகு டாக்டர் பீனா கண் பாதுகாப்பு பற்றி பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

பேரணி மற்றும் கருத்தரங்கில் சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், கண்ணியல் துறை தலைவர் அனுராதா, உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், துணை உறைவிட மருத்துவர் ரெனிமோள், உதவி பேராசிரியர் ஜெயலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டத்தில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் பேரிடர் தணிப்பு துறையினர் ஒன்றிணைந்து பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.
2. கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
3. அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
4. தஞ்சையில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் தொடங்கி வைத்தார்.
5. கரூரில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
கரூரில் நடந்த உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...