வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த அபூர்வ மரகத லிங்கம் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு தாலுகா கருவூலத்தில் வைக்கப்பட்டது


வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த அபூர்வ மரகத லிங்கம் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு தாலுகா கருவூலத்தில் வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த அபூர்வமரகதலிங்கம் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அந்த அபூர்வ மரகதலிங்கம் தற்போது தாலுகா கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட் டம் சாகர் தாலுகா கேளதி கிராமத்தில் பந்தகத்தே
ஹிரேமடம் அமைந்துள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இந்த மடத்திற்கு கடந்த 1672-ம் ஆண்டு ராணி சென்னம்மா அபூர்வ மரகதலிங்கத்தை அன்பளிப்பாக கொடுத்தார். பலகோடி ரூபாய் மதிப்பிலான அந்த அபூர்வமர கதலிங்கம், 5 இன்ச் உயரம் மற்றும் ஒரு கிலோ எடை கொண் டது.

மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த மரகதலிங்கம், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மடத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. ஏராளமான பக்தர்கள் அந்த மரகதலிங்கத்தை வழிபட்டு சென்று வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 1997-ம் ஆண்டு மடத்தின் மடாதிபதி, பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கினார். அதன் பின்னர் மடத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக அந்த மரகத லிங்கம் மீட்கப்படவில்லை.

இதனால் மரகதலிங்கம் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மரகதலிங்கத்தை மீட்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள், சாகர் எம்.எல்.ஏ. ஹரதாளுஹாலப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஹரதாளுஹாலப்பா எம்.எல்.ஏ., பந்தகத்தே ஹிரேமடத்தின் தற்போதைய மடாதிபதி மகேஷ்வரசிவாச்சாரி சுவாமி மற்றும் பக்தர்கள் முதல்-மந் திரி எடியூரப்பாவி டம், வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள மரகத லிங்கத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்-மந் திரி எடியூரப்பா, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள மரகத லிங்கத்தை மீட்க உத்தரவிட்டார். அதன் படி, வங்கியில் பாதுகாப்பு பெட் ட கத்தில் வைக்கப்பட் டிருந்த மரகதலிங்கம் கடந்த 7-ந்தேதி மீட்கப்பட்டது. அதாவது, 22 ஆண்டுகளுக்கு பிறகு அடமானம் வைக்கப்பட்ட மரகதலிங்கம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த மரகதலிங்கம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட் டது. இதையடுத்து விஜயதசமி தினத்தன்று அந்த மரகதலிங்கம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக பந்தகத்தே ஹிரேமடத்தில் வைக்கப்பட்டது.

இதனால் ஏராளமான மக்கள், விஜயதசமி தினத்தன்று மடத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும், மடாதிபதி மகேஷ்வர சிவாச்சாரி சுவா மியிடம் ஆசியும் பெற்று சென்றனர். இதில், ஹர தாளு ஹாலப்பா எம்.எல்.ஏ., சாகர்தாசில்தார் சந்திரசேகர நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சாமிதரிசனம் முடிந்ததும், மரகதலிங்கம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, தாசில்தார் சந்திரசேகரநாயக், ஹரதாளுஹாலப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

22 ஆண்டுகளுக்கு பிறகு மரகத லிங்கம் மீட்கப்பட்டு, விஜயதசமி அன்று தரிசனத்துக்கு வைக்கப்பட்ட தால் மக்களும், மடாதிபதி மகேஷ்வர
சிவாச்சாரி சுவாமியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story