மாவட்ட செய்திகள்

கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை + "||" + Police investigate suicide attempt of 2 students in college

கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு,

ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் குருநாத்(வயது18). இவர் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவருடைய தந்தை தங்கராசு, தாயார் லதா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் குருநாத்தை அவருடைய அண்ணன் படிக்க வைத்து வருகிறார்.


கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்த துரைக்கண்ணு மகன் சாமுவேல்(18). இவரும் குருநாத் படிக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.

வகுப்பறையில் வி‌‌ஷம் குடித்தனர்

இந்த நிலையில் குருநாத் தனக்கு தாய், தந்தை இல்லாததை பற்றியும், வறுமை நிலை குறித்தும் நண்பர் சாமுவேலுவிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற குருநாத் வகுப்பறையில் பூச்சி மருந்தை(வி‌‌ஷம்) குடித்து விட்டார். அப்போது அதை நேரில் பார்த்த நண்பர் சாமுவேல், குருநாத் கையில் மீதமிருந்த பூச்சி மருந்தை பறித்து அவரும் குடித்ததாக தெரிகிறது.

இதை தொடர்ந்து அவர்களை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தோற்றம் பற்றிய விசாரணை: சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனா தோன்றியது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
2. சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலையா? போலீஸ் விசாரணை
வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.