வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்


வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 7:26 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்கள், தாங்களாகவே தங்களது விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்திடும் பொருட்டு, வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் என்ற புதிய திட்டம், கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைமுறையில் இருந்தது. தற்போது, இந்த திட்டமானது வருகிற 15-ந் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அனைத்து வாக்காளர்களும், தங்களது பெயர், வயது, உறவினர் பெயர், பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் போன்றவற்றினை சரிபார்ப்பு, திருத்தம் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், விடுபட்ட, பதிவுசெய்யாத வாக்காளர்களை சேர்த்தல், வாக்குச்சாவடி தொடர்பான கருத்துகள் குறிப்பிடுதல் போன்ற பணிகளை, தேசிய வாக்காளர்கள் சேவை இணைய வாயிலாக (www.nvsp.in) , வாக்காளர் உதவி மையம்- செல்போன் செயலி (Voter Helpline) , பொது இ-சேவை மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வாக்காளர் வசதி மையங்கள், வாக்காளர் உதவி மையம்- கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 போன்றவை வாயிலாகவும் பயன்படுத்தி தாங்களாகவே மேற்கொள்ளலாம். எனவே, அனைத்து வாக்காளர்களும், இத்திட்டத்தின் மூலம், தங்களது விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறும், 100 சதவீதம் குறைபாடற்ற வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story