மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை - ஆணைய தலைவர் பேச்சு + "||" + Regarding Government Welfare for Minorities There is not enough awareness Commission President Speech

சிறுபான்மையின மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை - ஆணைய தலைவர் பேச்சு

சிறுபான்மையின மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை - ஆணைய தலைவர் பேச்சு
சிறுபான்மையின மக்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் கூறினார்.
வேலூர், 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணைய செயலாளர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் ஜவகர்அலி, முகம்மதுஜான் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

ஆய்வுக்கூட்டத்துக்கு சிறுபான்மையின ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் அளிக்கும் கோரிக்கை மற்றும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்வு காணப்படும். மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆணைய செயலாளர் கண்காணிப்பார். எனவே அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு சம்மன் வழங்கவும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

சிறுபான்மையின மக்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நலத்திட்டங்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு கல்வி நிதி, புனித பயணம் செல்ல நிதி, தேவாலயம் சீரமைக்க நிதி, கடனுதவி உள்ளிட்டவை வழங்கி வருகிறது. இதனை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஆணைய செயலாளர் சுரேஷ்குமார், சிறுபான்மையின மக்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். பின்னர் சிறுபான்மையின மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில், 18 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.98 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரம், தொழில் தொடங்க நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லூர்துசாமி நன்றி கூறினார்.