மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு + "||" + In order to become a first-minister The lives of 18 MLAs The perpetrator is MK Stalin Minister Dindigul Srinivasan charged

முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின்  - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல், 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

கேள்வி:- தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில் இருந்து அவரும் எங்களுடன் தான் இருக்கிறார் என்று தெரிகிறது.

கேள்வி:- சத்தியமங்கலம் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வருகிறதே?

பதில்:- குட்டி யானையை தேடி யானைகள் வருவது இயற்கையானது. யானைகளிடம் இருந்து மக்களை காக்கும் பணியை வனத்துறை சிறப்பாக செய்து வருகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று புகழேந்தி கூறியிருக்கிறாரே?

பதில்:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி. தினகரன் மட்டும் அல்ல, மு.க.ஸ்டாலினும் காரணம் தான். அவர் முதல்-அமைச்சராக வேண்டும், டி.டி.வி.தினகரன் துணை முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமிர்தி பூங்காவை இரவிலும் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
அமிர்தி பூங்காவை பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
2. அதிகாரிகளின் விளக்கம் குழந்தைக்கு கதை சொல்வது போல் உள்ளது’ - ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டிப்பு
‘குடிநீர் பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளின் விளக்கம் குழந்தைக்கு ஒரே கதையை திரும்ப, திரும்ப கூறுவது போல் உள்ளது‘ என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டித்தார்.
3. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
திண்டுக்கல் மாநகராட்சியில் 11 இடங்களில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
4. அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் அறிவுரை
அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.
5. சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
சிறுமலையில் மூங்கில், பட்டாம்பூச்சி பூங்காங்கள் அமைத்து சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...