ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் - வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை


ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் - வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 3:45 AM IST (Updated: 11 Oct 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஸ்ரீமுஷ்ணத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் வெற்றிவீரன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆதிமூலம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், வறுமைக்கோடு பட்டியலை புதிதாக கணக்கெடுத்து ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் செல்லையா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறிது நேரம் கோஷம் எழுப்பிய அவர்கள், தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி, தாசில்தார் புகழேந்தியிடம் கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story