மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் + "||" + Madurai court issues notice to Central and State Governments

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் வெளிப்பாடாக தற்போது கீழடியில் ஏராளமான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் ஆதிச்சநல்லூரிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.


இதுபோன்ற வரலாற்று சான்றுகள் தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. எனவே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு வல்லநாடு, அகரம், முறப்பநாடு, திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், குறும்பூர், நல்லூர், கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட 32 இடங்களிலும், கீழடியை அடுத்த கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தேன்.

இதே போல் சிவகளையில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நாகரிகமான முறையில் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அங்கெல்லாம் விரிவான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் தமிழர்களின் தொன்மையான வரலாறு உலக அளவில் நிரூபிக்கப்படும். எனவே தாமிரபரணி ஆற்றங்கரை, கொந்தகை, சிவகளையில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
2. ஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு தொழிலாளர் வழக்கை இன்று உள்ளது.
சர்வதேச மகளிர் தினம் வருகிற 8-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மகளிரை கவுரவிக்கும் இந்த நாளை முன்னிட்டு, சென்னை ஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு ஒரு வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிக்க உள்ளது.
3. சர்ச்சை பேச்சு விவகாரம் ; பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி தேர்தல் பேரணியில் பேசிய சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4. பணி மூப்பு அடிப்படையில் தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாதத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பணி மூப்பு அடிப்படையில் தகுதியான தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாதத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. அயோத்தி தீர்ப்பை கண்டித்து போராட்டம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க டி.ஜி.பி.க்கு தெரியும் ஐகோர்ட்டு கருத்து
‘அயோத்தி தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்ட வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தமிழக டி.ஜி.பி.க்கு தெரியும்’ என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.