ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை இணையதளத்தின் மூலம் அறியலாம் - கலெக்டர் தகவல்


ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை இணையதளத்தின் மூலம் அறியலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 8:02 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் அறியலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளான கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் ஆகியவற்றினை தூர்வாரி, ஆழப்படுத்தி, மேம்படுத்தி மழைநீரினை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 464 சிறுபாசன குளங்கள் மற்றும் 4 ஆயிரத்து 325 ஊருணிகள் உள்ளன. இதில் 385 சிறுபாசன குளங்கள் மற்றும் 2 ஆயிரத்து 759 ஊருணிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.46.84 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோன்று மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் அறியலாம், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story