மாவட்ட செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு + "||" + Car motorcycle collision One death

சுங்குவார்சத்திரம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு

சுங்குவார்சத்திரம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு
சுங்குவார்சத்திரம் அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பெருமாள் என்பவருடன் தனது மோட்டர் சைக்கிளில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.


அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாந்தவேலூர் என்னும் இடத்தில் சாலையை கடக்க நின்ற போது சென்னை நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் அங்கு சாலையை கடக்க நின்று கொண்டிருந்த நந்திமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (45), சேகர் (40) ஆகியோர் மீதும் மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைத்த கருணாகரன் உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக பலியானார்.

சேகர் மேல் சிகிச்சைக்காகக் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு, தறிகெட்டு ஓடிய கார் சலூன் கடைக்குள் புகுந்தது; 3 பேர் படுகாயம்
மூங்கில்துறைப்பட்டு அருகே தறிகெட்டு ஓடிய கார் சலூன் கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
2. கள்ளக்குறிச்சியில் கார்-லாரி மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி
கள்ளக்குறிச்சியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
3. பெரம்பலூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம் முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன் உயிர் தப்பினார்
பெரம்பலூா் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் அதிர்‌‌ஷ்டவசமாக முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன் உயிர் தப்பினார்.
4. பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது பெண்கள் உள்பட 8 பேர் காயம்
பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்து பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
5. கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்பு; 2 பேர் கைது
கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...