மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு + "||" + Love married woman commits suicide

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு
வெள்ளகோவில் அருகே கோவிலுக்கு கணவர் வரமறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில்,

வெள்ளகோவில் அருகே உள்ள சேர்வகாரன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு கியாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி போதுபொன்னு (வயது29). இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இன்னும் குழந்தை ஏதும் இல்லை.


சம்பவத்தன்று போதுபொன்னு தனது கணவரை வெள்ளகோவில் அருகே உள்ள நாட்டராயசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவோம், எனவே என்னுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது செல்வராஜ் மது அருந்தி இருந்ததால் அவர் கோவிலுக்கு செல்ல மறுத்து விட்டார். இதனால் போதுபொன்னுவும் கோவிலுக்கு செல்லவில்லை.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது போதுபொன்னு, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அவருடைய உடல் கருகியது.

உடனே அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி போதுபொன்னு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தாராபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்த உள்ளார்.

கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் காதல் திருமணம் செய்த, புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை - ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு
நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
3. குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தூக்கமாத்திரைகளை தின்று பெண் தற்கொலை
குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர். அத்துடன் விஷமும் குடித்ததால் பெண் பரிதாபமாக இறந்தார்.
4. காதல் திருமணம் செய்த ஒரு ஆண்டில்: கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? தீவிர விசாரணை
கதக் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு ஆண்டில் கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை - வலங்கைமான் அருகே பரிதாபம்
வலங்கைமான் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.