கோலார் தங்கவயல் அருகே பரபரப்பு சம்பவம் 8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோலார் தங்கவயல் அருகே 8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம், கோலார் தங்கவயல் அருகே உரிகம்பேட்டை பகுதி மஞ்சுநாத் நகரில் 8 வயது சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். நேற்று முன்தினம் காலையில் அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். இதனால் அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் குட்டி என்ற தமிழரசன்(வயது 22) அந்த சிறுமியின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார்.
பின்னர் அவர் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கி வாயில் துணியை வைத்து அமுக்கி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தாள்.
நேற்று காலையில் சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவளது உடலில் ரத்த காயங்களும் இருந்தன. அதை கவனித்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கண்ணீர் மல்க தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், சம்பவம் குறித்து உரிகம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிறுமியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த தமிழரசனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது அவர் உரிகம்பேட்டை அருகே எரகானஹள்ளி கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ் தலைமையிலான போலீசார் எரகானஹள்ளி கிராமத்திற்கு சென்று சூர்யபிரகாசை தேடினர்.
அப்போது அவர் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தமிழரசனை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ்காரர் முனிசாமியை கற்களை வீசி தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். இதில் போலீஸ்காரர் முனிசாமி படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ், சரண் அடைந்துவிடும்படி தமிழரசனிடம் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் மீதும் கற்களை வீசி தமிழரசன் தாக்க முயன்றார். இதையடுத்து பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ் தனது துப்பாக்கியால் தமிழரசனை நோக்கி 2 முறை சுட்டார். இதில் ஒரு குண்டு தமிழரசனின் காலில் துளைத்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரையும்,கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் முனிசாமியையும் சிகிச்சைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கோலார் தங்கவயல் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story