மாவட்ட செய்திகள்

திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன + "||" + The statues of Sami who were taken to Trivandrum returned to Kumari

திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன

திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன
திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன.
களியக்காவிளை,

திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அங்கு பூஜைகள் முடிந்த பின்பு அவை மீண்டும் யானை மற்றும் பல்லக்கில் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன. நேற்று முன்தினம் சாமிசிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவில் வந்தடைந்தன. நேற்று நெய்யாற்றின்கரையில் இருந்து புறப்பட்டு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தன. அவற்றுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கியது. அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து அந்தந்த கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
4. வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
5. சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆங்கில புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.