மாவட்ட செய்திகள்

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது + "||" + Neil Armstrong Award for Perambalur Student on behalf of NASA Space Research Center

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது கலெக்டர் பாராட்டு.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிக செயலாளரும், தனியார் மருந்து வணிக ஏஜென்சியின் உரிமையாளருமான சரவணன்- நித்யா தம்பதிகளின் மகன் நவீன் விக்னே‌‌ஷ். இவர் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். சைனிக் பள்ளிமாணவர் நவீன் விக்னே‌‌ஷ். இந்தியாவிலிருந்து இளம் விஞ்ஞானிகளுக்கான இன்டர்நே‌‌ஷனல் ஸ்பேஸ் சயின்ஸ் கான்பரன்சிங் போட்டியில் பங்கேற்று கடந்த 5-ந் தேதி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றார். இப்போட்டியில் கலந்துகொண்ட நவீன் விக்னே‌‌ஷ் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்று நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட மொத்தம் 65 மாணவர்களில் 6-வது இடத்தை பிடித்து "நீல் ஆம்ஸ்ட்ராங்" என்ற விருதை வென்று பெரம்பலூர் திரும்பி உள்ளார். இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சாந்தா மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அதிகாரி அருள்அரங்கன் ஆகியோர் நவீன்விக்னேசுக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்கினார்
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
2. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார்
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி வென்றார்.
3. தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது
தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளதால் கல்வி அதிகாரி வாழ்த்து கூறினார்.
4. திருச்சியில் வாழை சார்ந்த தொழில் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்படும்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் விரைவில் வாழை சார்ந்த தொழில் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று இயக்குனர் உமா கூறினார்.
5. க.பரமத்தி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு தேசிய விருது
க.பரமத்தி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...