மாவட்ட செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார் + "||" + Female suicide tukkuppottu Father complains to police that Savil is suspicious

காட்டுமன்னார்கோவில் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்

காட்டுமன்னார்கோவில் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்
காட்டுமன்னார்கோவில் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரபு மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்றார். இதை தொடர்ந்து ராஜலட்சுமி செல்போன் மூலம் தனது கணவரிடம் பேச முயன்றார். ஆனால் அவர் சரியாக பேச வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தையான வடலூர் ஆபத்தாரனபுரத்தை சேர்ந்த வள்ளல் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் ராஜலட்சுமியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஆத்தூர் அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. கடலூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி பொதுமக்கள் பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
கடலூர் ஆல்பேட்டையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு
ஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. மதுரை அருகே பயங்கரம் கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற பெண் காதலனுடன் கைது
கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றது தொடர்பாக அவனுடைய தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.