மாவட்ட செய்திகள்

ஓமன் நாட்டில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல் + "||" + To work in Oman Women can apply Collector Information

ஓமன் நாட்டில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

ஓமன் நாட்டில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
ஓமன் நாட்டில் பணிபுரிய விழுப்புரம் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம், 

ஓமன் நாட்டில் வீட்டுவேலை பணியாளராக பணிபுரிய 30 வயதுக்கு மேற்பட்ட 300 பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஏற்கனவே வெளிநாடுகளில் வீட்டுவேலை செய்த அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் 18 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 22 ஆயிரத்து 440 ரூபாய் வரை வழங்கப்படும்.

அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரத்து 700 ரூபாய் வரையும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலை அளிப்போரால் வழங்கப்படும்.

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaid 2019@gmail.com என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண் 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com என்ற வலைதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.