மாவட்ட செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + "||" + ADMK Candidate He will succeed Interview with Minister Kadambur Raju

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்தியாவில் முதல் முறையாக நதிநீர் இணைப்பு நாங்குநேரி தொகுதியில் நடந்து வருகிறது. இது நிறைவு பெறும் போது நாங்குநேரி தொகுதி வளம் பெறும் தொகுதியாக மாறும். அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் அந்த பகுதி மக்களுடன் மக்களாக இருக்கும் வேட்பாளரை நாங்கள் நிறுத்தி உள்ளோம்.


நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் தொகுதியை மறந்து சென்று விட்டார். இதனால் தான் தற்போது நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இது மக்களுக்கு தெரியும். இது எங்களுக்கு சாதகமாக அமையும். நிச்சயமாக அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சீன அதிபரின் வருகை தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெருமை கொள்கிறார்கள். நாளுக்கு நாள் அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தி.மு.க.வினர் பலரின் பதவிகள் தான் பறிபோக உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பா.ம.க. மறியல்
அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.