மாவட்ட செய்திகள்

மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை + "||" + Worker commits suicide as son denounces alcoholism

மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகேசித்தன் குடியிருப்பைேசர்ந்தவர் குமரேசன் (வயது 49). தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.


குமரேசனுக்குமதுகுடிக்கும்பழக்கம் இருந்துள்ளது. இதனை மறப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாகஅவர்சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம்இரவு மீண்டும்மதுகுடித்துள்ளார்.

தற்கொலை

இதனைஅறிந்த அவருடையமகன் கண்டித்ததாக தெரிகிறது.இதனால்மனமுடைந்தகுமரேசன் வீட்டின் அருகில் உள்ள தோப்பில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றுகாலை அப்பகுதியில் சென்றவர்கள்,குமரேசன் மரத்தில்பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குமரேசனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.மேலும்இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5. தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை
தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.