மாவட்ட செய்திகள்

இட்டமொழி, பரப்பாடியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு “மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்” என பிரசாரம் + "||" + Congress candidate Ruby Manoharan Extreme vote collection in villages

இட்டமொழி, பரப்பாடியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு “மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்” என பிரசாரம்

இட்டமொழி, பரப்பாடியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு “மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்” என பிரசாரம்
இட்டமொழி, பரப்பாடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், “கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்“ என பிரசாரம் செய்தார்.
இட்டமொழி,

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தனது பிரசாரத்தை வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து ஏழாங்கால், ஐந்தாங்கால், ஆண்டான்குளம், இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, புதூர், மனகாவலபுரம், மேலபண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கனாங்குளம், ஏறந்தை, பட்டரைகட்டிவிளை, மன்னார்புரம், வடக்கு பாப்பான்குளம், தெற்கு பாப்பான்குளம், பொத்தையடி, ஆனிகுளம், காத்தநடப்பு, அண்ணாநகர், பரப்பாடி, வேப்பங்குளம், கல்மாணிக்கபுரம், தளபதிசமுத்திரம், கண்டிகைபேரி, இளையநயினார்குளம், நல்லான்குளம், மேட்டுக்காலனி, சிறுவளஞ்சி, அணைக்கரை, வாகைகுளம், தோரணாக்குறிச்சி, ஆழ்வார்குளம், தட்டான்குளம், கிரு‌‌ஷ்ணன்புதூர், பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-


என்னை பெரிய பணக்காரர் மாதிரியும், நான் ஜெயித்தால் மக்களோடு மக்களாக பழக மாட்டேன் என்றும் தவறான செய்தியை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றனர். நான் எப்படி இருந்தேன், எப்படி வளர்ந்தேன் என்ற வி‌‌ஷயம் அவர்களுக்கு தெரியாது. நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, விவசாய கூலி வேலை செய்து படித்தேன். வீட்டில் க‌‌ஷ்டம் ஏற்பட்டதால் 18 வயதில் விமானப்படை ராணுவத்தில் சேர்ந்தேன்.

பிறகு சென்னையில் 50 பேரோடு கன்ஸ்ட்ரக்‌‌ஷன் தொழில் தொடங்கினேன். தற்போது 3 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். எந்த கிராமத்தில் இருந்து நான் வந்தேனோ, அப்படிப்பட்ட கிராம மக்களுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏழை-எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன். தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கே.பி.கே.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, நடிகர் விஜய் வசந்த் பிரசாரம் செய்தார். பரப்பாடி காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கி மன்னார்புரம், இட்டமொழி, அழகப்பபுரம், விஜயஅச்சம்பாடு, காரியாண்டி, பார்பரம்மாள்புரம், மூலைக்கரைப்பட்டி, மருதகுளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை