மார்த்தாண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
மார்த்தாண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் காரவிளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 50). இவர் மீது முளங்குழி பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், ராஜூ வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், அனிஷ் குமார் உள்பட 4 பேரிடம் ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் வாங்கியிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜூவை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story