மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி + "||" + Interview with Collector D. Ratna on the implementation of development projects in Ariyalur district

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டராக கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் பணியாற்றி வந்த டி.ஜி.வினயை மதுரைக்கு பணியிட மாற்றம் செய்தும், திருவள்ளூர் சப்- கலெக்டராக பணிபுரிந்த டி.ரத்னாவை அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அரியலூர் மாவட்ட கலெக்டராக ரத்னா நேற்று, அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி பொறுப்புகளை ஒப்படைத்தார். அரியலூர் மாவட்ட கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ரத்னாவை அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


வேளாண்மை, கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்

அப்போது கலெக்டர் டி.ரத்னா நிருபர்களிடம் கூறுகையில், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காகவும், வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியும், மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்றார். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் அனுஜார்ஜ், லட்சுமி பிரியா, விஜயலட்சுமி ஆகிய 3 பெண் கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். தற்போது 4-வது பெண் கலெக்டராக டி.ரத்னா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
2. வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
3. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
4. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
5. தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.