மேலூர், திருமங்கலம், பசுமலை பகுதிகளில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி
மேலூர், திருமங்கலம், பசுமலை பகுதிகளில் பேரிடர் மேலாண்மை தணிக்கை தினத்தை ெயாட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலூர்,
மேலூரில் வருவாய்த்துறையினர் சார்பில் தாசில்தார் சிவகாமிநாதன் தலைமையில் பேரிடர் மேலாண்மை தணிக்கை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அவசர உதவிக்கு 108 என்ற எண்ணுக்கு அழைப்பது போல், பேரிடர் பாதிப்புகளின்போது அவசர உதவிக்கு 1077 என்ற இலவச எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்றும், அதன்பேரில் மழைக்காலத்தில் ரோட்டில் மரங்கள் சாய்ந்து கிடந்தாலும், வீடுகள், கட்டிடங்கள் இடிந்தாலோ, தண்ணீரில் யாரேனும் சிக்கிக்கொண்டாலோ, கண்மாய் மற்றும் நீராதார கரையில் உடைப்பு ஏற்பட்டாலும் அதை சரிசெய்ய பேரிடர் மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வருவார்கள் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியில் வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரிடர் மேலாண்மை தணிக்கை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை திருமங்கலம் வக்கீல் சங்க தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார். திருமங்கலம் ராஜாஜி சிலையில் இருந்து தொடங்கிய பேரணி, திருமங்கலம் தாலுகா அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியின்போது, இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனியான்டி செய்திருந்தார்.
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வருவாய் துறையின் சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மை தணிக்கை தின விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பரங்குன்றம் தாலுகா மண்டல துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார் வருவாய் ஆய்வாளர் பிரின்ஸ், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அழகேசன், சவுராஷ்டிரா மகளிர் கல்லூரி செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தீயணைப்பு துறை அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர். மேலும் தீத்தடுப்பு ஒத்திகையும் அவர்கள் செய்தனர். இதையடுத்து பேரிடர் மேலாண்மை தணிக்கை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் சவுராஷ்டிரா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story