மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு + "||" + Tenpennai being hit on the river 10 days after student body recovery

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
ஓசூர், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் குருமூர்த்தி(வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி குருமூர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கோபசந்திரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது திடீரென அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். குருமூர்த்திக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேடும் பணியில் சூளகிரி போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மீட்பு குழுவினர் பாத்தகோட்டா பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பரிசல் மூலம் சென்று மாணவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் ஓரத்தில் குருமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டனர்.

இது குறித்து அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகன் கைது 82 பவுன் நகைகள் மீட்பு
ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 82 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்
சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்கப்பட்ட சம்பவத்தில், டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
3. திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் மீட்பு
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.
4. பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் பத்திரமாக மீட்பு
பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கித் தவித்த 51 பேர் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன்சிலைகள் மீட்பு
தஞ்சை பெரியகோவிலுக்கு சொந்தமான 2 ஐம்பொன் சிலைகள் தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்தது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 2 ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர்.