டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் - மனைவியை காரில் கடத்த முயற்சி வாள் சண்டை வீரர் கைது
திருவட்டார் அருகே டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்- மனைவியை காரில் கடத்த முயன்ற வாள்சண்டை வீரரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்,
தக்கலை அருகே பறைக்கோடு வைகுண்டபுரத்தை சேர்ந்தவர் ரோஸ்ஐசக் (வயது 47). இவருடைய மனைவி கிரிஜா(43). கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இரவிபுதூர் கடையில் வெளிநாடு ேவலைக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரோஸ்ஐசக் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடத்த முயற்சி
திருவட்டார் அருகே தேமானூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் எனது நிறுவனத்தின் மூலம் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றனர். அவர்களுக்கு கூறியபடி அங்கு வேலை கொடுக்காததால் அதில் 2 பேர் ஊர் திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊர் திரும்பியவர்களில் ஒருவருடைய வீட்டுக்கு நானும், எனது மனைவியும் காரில் சென்ேறாம். பின்னர், அவரை மீண்டும் வெளிநாடு அனுப்பி வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வாள்சண்டை வீரரான டேவிட்ராஜ்(39) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்து தகராறு செய்து எங்களை காரில் கடத்த முயன்றனர். மேலும், எங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கைது
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி டேவிட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ேமலும் சிலரை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story